;
Athirady Tamil News

வீட்டின் சுவரை கட்டிக்கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம் ; பறிபோன உயிர்

0

அலவத்துகொடை – வராகஸ்ஹின்ன பகுதியில், இரண்டு பேர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடொன்றில் சுவரை கட்டிக்கொண்டிருந்தபோது, மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின்போது இருவர் காயமடைந்துள்ள நிலையில் அக்குரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் நாகொல்லகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.