தெல்லிப்பளை: மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பப் பெண் – மரணத்திற்கான அதிர்ச்சி காரணம் வெளியீடு!
;
மேற்படி பெண்ணிற்கு கடந்த எட்டாம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் உரிய சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று புதன்கிழமை அதிகாலை மயங்கிய நிலையில் இருந்ததை அடுத்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இம் மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.