;
Athirady Tamil News

வாரிவனம் முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம்!

0

யாழ்.சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிசேகப் பெருவிழா இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

சிவஸ்ரீ சி.சோதிரத்தினக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிசேக பெருவிழாவில்,50 மேற்பட்ட அந்தணக் குருமார்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மேலும், தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிசேகம் இடம்பெறவுள்ளது.

முன்னர் சோழர் காலத்து கட்டடக்கலை அம்சங்களோடு சிறப்புற்று விளங்கிய சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவனாலயத்தின் எல்லையில்,கிராமிய தெய்வமாக வீற்றிருந்து முத்துமாரி அம்மன் அருள் பாலித்து வந்தார்.

பிற்காலத்தில் போர்த்துக்கேயரால் சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவனாலயம் அழிக்கப்பட்டபோது ஆலய விக்கிரகங்களை குளங்களுக்குள் போட்டும், மண்ணில் புதைத்து வைத்தும் சைவப் பெரியார்கள் பாதுகாத்து வைத்தனர்.

அவ்வாறு புதைத்து வைக்கப்பட்டு பின்னாளில் புளியம் மரத்தடியில் காட்சி கொடுத்து, இற்றைவரையும் பக்தர்கள் வேண்டுவன எல்லாவற்றையும் கொடுத்து முத்துமாரி அம்மன் அருள்பாலித்து வருகிறாள் என்பது அடியவர்களின் நம்பிக்கையாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.