;
Athirady Tamil News

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல்; எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ

0

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலால் எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று புதன்கிழமை(1) அதிகாலை தெரிவித்தது.

குவைத் சர்வதேச விமான நிலையம், ஈரான் மற்றும் அது ஆதரிக்கும் ஆயுதக் குழுக்களால் ஏவப்பட்ட ட்ரோன்களின் அப்பட்டமான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ராஜி கூறியதாக, அரசுக்குச் சொந்தமான குவைத் செய்தி நிறுவனம் (KUNA) தெரிவித்துள்ளது.

அதோடு விமான நிலைய எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் குறிவைக்கப்பட்டதன் விளைவாக, அந்த இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

எனினும் இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், அவசர மருத்துவ சேவைகள் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.