27,000 அடி உயரத்தில் சேதமான விமான எஞ்சின் ; அதிஷ்டவசமாக தப்பிய உயிர்கள்
நைஜீரியாவில் 27,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் இடது பக்க எஞ்சின் திடீரென வெடித்து சேதமடைந்தது.
லாகோஸிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை, விமானிகள் அவசரமாக பெனின் சிட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினர்.
விமானத்தில் இருந்த 80 பயணிகளும் உயிர் தப்பினர். சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சுமார் 27,000 அடி உயரத்தில் பயணித்தபோது, இடது எஞ்சினில் பலத்த இடி சத்தம் கேட்டதாக விமானத்தில் இருந்த குழுவினர் தெரிவித்தனர்.
விமான நிறுவனத்தின் அறிக்கையின்படி, விமானக் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கி, விமானத்தை பெனின் விமான நிலையத்திற்குத் திருப்பிவிட்ட பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.