;
Athirady Tamil News

160 கி.மீ. வேகத்தில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து: 7 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்

0

பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த அயன் அலி (17) தன் நண்​பர்​கள் அஷ்ரம் ஷெரீஃப் (16), ஏத்​தன் ஜார்ஜ் (17), அஷ்​வின் நாயர் (17), பரத் (17), முகமது ஃபர்​ஹான் (18) ஆகியோ​ருடன் நேற்று முன்​தினம் காலை 5 மணியள​வில் ஹொசக்​கோட்​டை​யில் இருந்து தேவனஹள்ளி நோக்கி காரில் சென்றார். அப்​போது அயன் அலியின் கார் இரு சக்கர வாக​னத்​தின் மீது மோதியது. அதில் இரு சக்கர வாக​னத்​தில் பயணித்த ககன் (27) சம்பவ இடத்தில் உயி​ரிழந்​தார்.

மேலும் முன்​னால் சென்ற சர‌க்கு வாக​னத்​தின் மீது கார் மோதி​ய​தில் அதன் ஓட்​டுநர் பாலசுப்​பிரமணி​யன் (32) படு​கா​யம் அடைந்​தார். அயன் அலி மணிக்கு 160 கி.மீ. வேகத்​தில் சரக்கு வாக​னத்​தின் மீது மோதி​ய​தில் அதன் சக்​கரங்​கள் தனித்​தனி​யாக உடைந்து எதிரில் வந்த வாக​னங்​கள் மீது மோதி​ய​தில் அடுத்​தடுத்து 2 வாக​னங்​கள் விபத்​துக்கு உள்​ளா​யின. அதனால் 4 பேர் காயமடைந்​தனர். அயன் அலி​ பயணித்த எக்​ஸ்​யூவி 700 கார் உடைந்து நொறுங்கி உருக்​குலைந்து போன​தில் 6 பேரும் உயி​ரிழந்​தனர்.

போலீ​ஸார் மேற்​கொண்ட விசா​ரணை​யில், 17 வயதான அயன் அலி மணிக்கு 160 கி.மீ. முதல் 170 கி.மீ. வேகத்​தில் காரை ஓட்​டிய​தால், விபத்து ஏற்​பட்டது தெரிய வந்​தது. அயன் அலி உள்​ளிட்ட 6 பேரும் 10-ம் வகுப்பு மாணவர்​கள் என தெரிய வந்​துள்​ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.