நாட்டுக்கு வந்த அவுஸ்திரேலிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்; தவிப்பில் மனைவி
மாத்தறை வெலிகமயில் உள்ள பெலேனா கடற்கரையில் நேற்று (25) அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவியுடன் சேர்ந்து நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் வெலிகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.