;
Athirady Tamil News

சட்டமன்றத்தில் கணவன்- மனைவி! முதலமைச்சரை கேள்வி கேட்ட பெண் MLA

0

மேகாலயா சட்டமன்றத்தில் முதலமைச்சரை எம்எல்ஏவாக உள்ள அவரது மனைவியே சரமாரியாக கேள்வி கேட்டு திணறடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

சட்டமன்ற உறுப்பினரான மெஹ்தாப் சந்தீ சங்மா, முதலமைச்சரை நோக்கி கேள்விகளை எழுப்பினார்.

நிலுவையில் உள்ள கால்நடை கல்வித் திட்டங்கள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் பிற முன்மொழியப்பட்ட நிறுவனங்களின் நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு கோரினார்.

கால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்களில் ஆட்பற்றாக்குறை ஏன் இருக்கிறது? சட்டமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனைகள் ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை? என கேள்வி எழுப்ப, அதற்கு முதலமைச்சரோ நில அடையாளம் காணல் மற்றும் மனிதவளத் திட்டமிடல் தாமதங்களுக்குக் காரணம் என பதிலளித்தார்.

இது ஒரு ஆரோக்கியமான விவாதமாக பார்க்கப்பட்டாலும் இருவரும் கணவன்- மனைவி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ வைரலாக, முதலமைச்சரே ஆனாலும் மனைவி முன் இப்படித்தான் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.