;
Athirady Tamil News

ஈரானுக்கான சேவைகளை நிறுத்தும் Qatar Airways

0

கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் ஈரானுக்கான தனது சில விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தும் காலத்தை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. Qatar Airways நிறுவன் அறிக்கை ஒன்றின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது.

அதேவேளை புதிய கால அட்டவணையின்படி, மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை கட்டார் தலைநகருக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படும்.

இந்த நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில் ஈரானுக்கான மற்ற அனைத்து கட்டார் ஏர்வேஸ் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.