போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்
ஈரானின் பந்தர் அப்பாஸின் மேற்கு பகுதியில் 4.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது , இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளமை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.