;
Athirady Tamil News

அமெரிக்காவின் 2,700 கோடி பெறுமதியான ரேடார் அமைப்பிற்கு சம்பவம் செய்த ஈரான்

0

அமெரிக்காவின் 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான ‘தாட்’ ரேடார் அமைப்பு ஈரானால் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் பதில் தாக்-குதல்கள் நடத்தி வருகிறது.

நேற்று இத்தாக்குதலில், ஜோர்டானில் உள்ள முவாபக் சால்டி விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு அமைப்பை இயக்குவதற்கான, இந்திய மதிப்பில் 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ராடார் அமைப்புகளை ஈரான் அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியா மற்றும் குவாம் உட்பட உலகளவில் அமெரிக்கா எட்டு தாட் அமைப்புகளை கொண்டுள்ளது.

ஒவ்வொன்றின் மதிப்பும் 9,000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில் உள்ள ரேடாரின் மதிப்பு மட்டும் 2,700 கோடி ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.