ஈரானின் கொட்டத்தை அடக்கிய சவூதி அரேபியா; 56 ஆளில்லா வானூர்திகள் அழிப்பு
சவூதி அரேபியா வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா வானூர்திகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு ஆளில்லா வானூர்தி ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை (Diplomatic Area) இலக்கு வைக்க முயன்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அதேவேளை முன்னதாக நேற்றையதினம் 53 ஆளில்லா வானூர்திகள் மற்றும் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை இஸ்ரேல் இரான் போர் இரண்டாவது கிழமியும் தொடரும் நிலையில், எரிபொருள மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டால் உலக நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.