;
Athirady Tamil News

ஓடும் ரயிலுக்கு அடியில் விழுந்த மகன் ; உயிரைப் பணயம் வைத்து ஹீரோவாக மாறிய தந்தை

0

தந்தை அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வங்கதேசத்தில் ஒரு தந்தை தனது உயிரைப் பணயம் வைத்து, ஓடும் ரயிலுக்கு அடியில் பாய்ந்து தனது மகனைக் காப்பாற்றியுள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

உயிருடன் மீட்பு
வங்கதேசத்தின் ஒரு ரயில் நிலையத்தில், ரயில் நடைமேடைக்கு (Platform) உள்ளே நுழைந்த அந்த நொடியில், எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விழுந்துள்ளான்.

ரயிலை நிறுத்த முடியாது என்பதை உணர்ந்த தந்தை, ஒரு நொடியும் யோசிக்காமல் தண்டவாளத்தில் குதித்துள்ளார்.

சிறுவனைத் தூக்கிக் கொண்டு வெளியேற நேரமில்லாததால், தந்தை தனது மகனை நடைமேடைக்குக் கீழே இருந்த மிகக் குறுகிய இடைவெளியில் , அவன் மீது தனது உடலை ஒரு கேடயமாகப் போர்த்திக் கொண்டுள்ளார்.

மரணத்தின் இரைச்சலோடு ரயில் அவர்கள் தலைக்குச் சில அங்குலங்களுக்கு மேலே கடந்து சென்றது. ரயில் கடந்த பிறகு, இருவரும் சிறு காயங்கள் கூட இன்றி உயிருடன் மீட்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.