;
Athirady Tamil News

செம்மணியில் 6ஆம் நாள் அகழ்வுப் பணி: மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.

0
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் மூன்று என்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித என்பு கூட்டு தொகுதியுடன் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 246 மனித என்புகூட்டு  தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 243 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண் அரித்து எடுக்கப்பட்ட நிலையில் , தற்போது அவை உலர விடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பணிகள் முடிவடைந்த பின்னரே , அது தொடர்பில் உறுதியாக கூற முடியும் எனவும் , நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வு பணிகள் நடைபெறாது எனவும் , 7ஆம் நாள் அகழ்வு பணிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்படும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.