;
Athirady Tamil News

மனிதக் கைபோல விளைந்த சேனைக்கிழங்கு… ரூ.13 லட்சம் கொடுத்தும் விற்க மறுத்த விவசாயி

0

குவாங்டாங்,

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் மனிதக் கை போன்ற வடிவில் சேனைக்கிழங்கு விளைந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் காய்கறிகளை அறுவடை செய்ய நிலத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது, மனிதக் கை போன்ற வடிவில் ஏதோ ஒன்று கிடைத்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது மனித உடல் பகுதி என எண்ணி அருகிலிருந்தவர்களை அழைத்துள்ளார்.

பின்னர் முழுமையாக தோண்டியபோது அது மனிதக் கை அல்ல, சேனைக்கிழங்கு என்பது தெரியவந்தது. இந்த சேனைக்கிழங்கில் ஐந்து தனித்தனி “விரல்கள்” இருப்பதுடன், அவற்றில் ஒன்று கட்டைவிரலைப் போலச் சிறியதாக அமைந்திருந்தது. மேலும், விரல்களின் நுனிகள் கூட நகங்களைப் போன்ற தோற்றத்துடன் இருந்தது.

இந்த விசித்திரமான கிழங்கை காண அப்பகுதி மக்கள் விவசாயியின் வீட்டிற்கு திரண்டு வந்தனர். இதனை இணையத்தில் பகிர்ந்ததும், புகைப்படங்கள் வேகமாக பரவி டிரெண்டாகி வருகின்றன.

மேலும், இந்த அரிய வடிவமைப்புள்ள சேனைக்கிழங்கை ஒருவர் சுமார் 1 லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம்) கொடுத்து வாங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், விவசாயி அதை விற்க மறுத்ததாக தெரிகிறது. இந்த அபூர்வ நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.