;
Athirady Tamil News

நாட்டில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம்! களத்தில் இறக்கப்படவுள்ள மேலதிக பொலிஸார்

0

வரும் சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நகருக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்தல்
ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். கொழும்பு உட்பட பிரதான நகரங்களின் புகையிரத நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை மையப்படுத்தி மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

புத்தாண்டு கொள்வனவுகளுக்காக நகருக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் சன நெருக்கடியை கட்டுப்படுத்துவதுமே எமது பிரதான நோக்கமாக கருதப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரின் விசேட அறிவுறுத்தலின் பேரில், பொது இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், அந்தந்தப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் கீழ் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.