ஈரான் ஏவுகணையில் இந்தியர்களுக்கு நன்றி! கவனம் ஈர்த்த வாசகம்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போரில் இன்று ஈரான் அதன் 83ஆவது கட்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு நன்றி என ஈரான் எழுதியுள்ளது.
போரால் பாதிப்படைந்த ஈரானிய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகள் மற்றும் பிற பொருட்களை வழங்கியதற்காக இந்திய மக்களுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது.