நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சப்ரகமுவ மாகாணத்திற்கும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மழை பெய்யும்போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதுடன் இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.