;
Athirady Tamil News

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்!

0

ஈரானிய அரச வானொலி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தெற்கு துறைமுக நகரில் அமைந்துள்ள குறித்த வானொலி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களில் 214 சிறுவர்களும் அடங்குவர் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.