;
Athirady Tamil News

ஈரானை விட்டுவைத்தால் இஸ்ரேல் அழிக்கப்பட்டிருக்கும்: முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல்! – டிரம்ப்

0

இஸ்ரேலை ஈரான் அணு ஆயுதங்களால் அழித்திருக்கக்கூடும் என்பதால், அந்நாட்டின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப்பிடம், ‘உக்ரைனில் ரஷியா நடத்திவரும் தாக்குதல்களும் ஈரானில் அமெரிக்காவின் தாக்குதல்களும் ஒத்துப்போயுள்ளதை ஆமோதிக்கிறீர்களா?’ என்ற கேள்வியொன்று எழுப்பப்பட்டது.

இது குறித்துப் பேசிய டிரம்ப் : “ரஷியாவின் நடவடிக்கைகள் எனக்கு ரசிக்கவில்லை. உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளிலிருந்து இது அதிகம் வேறுபட்ட ஒன்று.

கடந்த 47 ஆண்டுகளாக தீய சக்தியாகத் திகழுமொரு நாட்டைப் பற்றி நீங்கள் கேள்வியெழுப்பியிருக்கிறீர்கள். ஈரான் ஏராளமான அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள விரும்பியது. அவர்களால் உலகெங்கிலும் இறப்புகள் ஏற்பட்டன. பயங்கரமானவர்கள் அவர்கள்.

நாங்கள் (அமெரிக்கா) மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகள் மீதும் சற்றும் எதிர்பாராமல் அவர்கள் தாக்குதல்களை நடத்தியிருப்பதைப் பாருங்கள். அப்படி அவர்கள் செய்யக்கூடாதல்லவா. அதைப்பற்றி எவரும் நினைத்துப்பார்ப்பதேயில்லை.

அவர்கள் மத்திய கிழக்கை கையகப்படுத்தி கட்டுப்படுத்த விரும்பினார்கள். இஸ்ரேலை நிரந்தரமாக வெளியேற்ற விரும்பினார்கள். அவர்களிடம் மட்டும் ஒரு அணு ஆயுதம் இருந்திருப்பின், அவர்களால் அதைச் செய்திருக்க முடியும்” என்றார்.

கடந்த மாத இறுதியில் ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல்களால் ஈரான் ஆடிப்போனது. அந்நாட்டின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் அமெரிக்கா – இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டைக்கு இன்று(மார்ச் 23) தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டது. அடுத்த ஐந்து நாள்கள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென டிரம்ப் தமது நாட்டின் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.