;
Athirady Tamil News

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறை விபத்துகளில் 40 போ் உயிரிழப்பு

0

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், ரமலான் திருநாள் விடுமுறையின்போது நிகழ்ந்த பல்வேறு விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களில் 40 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய அவசரக்கால மீட்புப் பிரிவு திங்கள்கிழமை வெளிட்ட செய்திக்குறிப்பில், ‘கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ரமலான் திருநாள் விடுமுறையான கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,914 அவசர அழைப்புகளுக்கு மீட்புப் படையினா் விரைந்து சென்று உதவினா்.

இதில் 484 சாலை விபத்துகள், 1,261 மருத்துவ அவசர நிலைகள், 62 தீ விபத்துகள், 33 மோதல் மற்றும் குற்றச் சம்பவங்கள் உள்ளிட்டவை அடங்கும். இச்சம்பவங்களில் 40 போ் உயிரிழந்த நிலையில், 1,993 பேருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

பண்டிகைக் காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்ய, மீட்புப் பணி அதிகாரிகளின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அவா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

எஞ்சியுள்ள விடுமுறை நாள்களில் உயிரிழப்புகளையும் சேதங்களையும் தவிா்க்க, பொதுமக்கள் குறிப்பாக பயணங்களின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.