;
Athirady Tamil News

தேர்தலில் படுதோல்வி! டென்மார்க் பிரதமர் ராஜிநாமா!

0

டென்மார்க் பொதுத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தலைமையிலான ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி.

இந்தப் பொதுத்தேர்தலில் கடந்த 1903-ஆம் ஆண்டுக்குப்பின் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சி. இதைத்தொடர்ந்து, தமது தலைமையிலான அரசைக் கலைப்பதற்கான ராஜிநாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்தார்.

மெட்டே ஃபிரடெரிக்சன் சார்ந்துள்ள இடதுசாரி அணி 84 இடங்களிலும் எதிர்தரப்பில் வலதுசாரி அணி 77 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இவ்விரு தரப்பு கட்சிகளுக்கும் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் 90 இடங்கள் இல்லை என்பதே சிக்கல்.

டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்மஸெனின் ‘மாடரேட்ஸ் பார்ட்டி (வலதுசாரி – இடதுசாரி சார்புநிலையற்ற கட்சி)’ 14 இடங்களைக் கைப்பற்றி இத்தேர்தலில் கிங்-மேக்கர் தகுதியைப் பெற்ருள்ளது. அக்கட்சியுடன் இருதரப்பும் தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆட்சியமைக்கப் போராடி வருகின்றன.

மொத்தமுள்ள 179 இடங்களில் 38 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளதால் ஆட்சியைத் தக்க வைக்க பிற கட்சிகளின் பேராதரவு சமூக ஜனநாயகக் கட்சிக்கு இப்போது தேவை.

இதனைத்தொடர்ந்து, புதன்கிழமை(மார்ச் 25) கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவார்த்தை நடைபெறும் நிலையில், அவர்கள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக மெட்டே ஃபிரடெரிக்சன் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிரது. ஒருவேளை கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், டென்மார்க்கில் புதிய தலைவரின்கீழ் ஆட்சியமையும். விரைவில் முடிவு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

You might also like

Leave A Reply

Your email address will not be published.