;
Athirady Tamil News

ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சக்கட்டம் ; புதிய தரைவழித் தாக்குதல் திட்டம்

0

ஈரானுக்குள் ஊடுருவிச் சென்று சில முக்கிய இலக்குகளைக் கைப்பற்றும் நோக்கில், தரைவழிப் படைகளை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கையில் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள தீவுகள், கார்க் தீவு ஈரானின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி முனையங்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் ஈரானின் அணுசக்தி வசதிகள் அல்லது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய கேந்திர மையங்கள் ஆகிய இடங்கள் பிரதான இலக்குகளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா தனது சிறப்புப் படைப் பிரிவுகள் உட்பட சுமார் 4,500 கூடுதல் வீரர்களை ஏற்கனவே மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாக அந்த செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.

ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த தரைவழித் தாக்குதல் திட்டம் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.