;
Athirady Tamil News

களத்தில் இறங்கும் அமெரிக்காவின் முக்கிய படை ; ஈரானின் முக்கிய ஸ்தலத்திற்கு வைக்கப்பட்ட குறி

0

மத்திய கிழக்கு நாடுகளில் தரைப்படை வீரர்களை அங்கு நிலைநிறுத்துவதை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் புகழ்பெற்ற 82-வது வான்வழிப் பிரிவின் தலைமையகக் குழுக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறந்த போர் அலகு
எத்தனை வீரர்கள் அல்லது எந்த இடத்திற்கு அவர்கள் செல்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட பென்டகன் மறுத்துள்ளது.

வட கரோலினாவைத் தளமாகக் கொண்ட இந்த 82ஆவது வான்வழிப் பிரிவு, உலகின் மிகச்சிறந்த போர் அலகுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஈரானின் முக்கியப் பகுதியான கார்க் தீவு போன்ற இடங்களைக் கைப்பற்ற இந்த வீரர்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த நகர்வு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.