;
Athirady Tamil News

ரஷ்யா – ஈரான் ஆயுத விநியோக பாதையை தாக்கிய இஸ்ரேல்

0

ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஆயுத விநியோக பாதையான காஸ்பியன் கடல் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செள்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத விநியோக சங்கிலியை உடைப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ரஷ்யா – ஈரான் ஆயுத விநியோக பாதையை தாக்கிய இஸ்ரேல் | Israel Strikes Russia Iran Arms Supply Route

காஸ்பியன் கடல் பகுதியில் ஈரானின் முக்கியத் துறைமுகமான பந்தர் அன்சாலியில் உள்ள போர்க்கப்பல்கள், கடற்படை கட்டளை மையம் மற்றும் கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் துறைமுகத்தில் பல கப்பல்கள் சேதமடைந்துள்ளன.

உக்ரைன் போருக்காக ஈரானிடமிருந்து ரஷியாவிற்கு அனுப்பப்படும் டிரோன்கள் மற்றும் வெடிமருந்துகள் இந்தத் துறைமுகம் வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. இந்தத் தாக்குதல் மூலம் அந்த விநியோகப் பாதையை இஸ்ரேல் முடக்கியுள்ளது.

கஸ்பியன் கடல் பகுதி இதுவரை போரினால் பாதிக்கப்படாத ஒரு பகுதியாக இருந்தது. இப்போது அங்கும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள ரஷியா, இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போரை மேலும் விரிவுபடுத்தும் என எச்சரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.