;
Athirady Tamil News

யாழ். வீதியில் வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்

0

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று(26.03.2026) இடம்பெற்றுள்ளது.

ஒருவர் படுகாயம்
பாதிக்கப்பட்ட நபர், சிறையில் இருப்பவருக்கு உணவு கொடுத்துவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது, முன் பகை காரணமாக அவர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.