;
Athirady Tamil News

‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ – இந்தியாவில் இருந்து வருகைதந்த துவிச்சக்கர வண்டி அணியினருக்கு யாழில். வரவேற்பு

0
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ”Team Bison” அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride – Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது.

துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஊடாக மக்களின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், உள்ளூர் துவிச்சக்கரவண்டிப் பயண அணியினரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி அணி ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

அவ்வணியினரை , நாடாளுமன்ற உறுப்பினர்களான ச ஸ்ரீபவானந்தராசா , க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் பலத்த வரவேற்பளித்தனர்

குறித்த குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கிய தமது துவிச்சக்கரவண்டிப் பயணத்தை ஆரம்பித்து, மதியம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய அணியினரைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நாளை  சனிக்கிழமை இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.