வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய நெடுங்கேணி வைத்தியசாலை
வவுனியா வடக்கு – நெடுங்கேணி பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
நெடுங்கேணி ஒலுமடுக் கிராம சேவகர் பிரிவில் 03 மற்றும் 04ம் திகதிகளில் பெய்த கடுமழைக் காரணமாக விவசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் புகையிலைச் செய்கை, கத்தரி உள்ளிட்ட பல்வேறு பயிர்ச்செய்கைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலை வளாகம்
திடீரென பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்களால் விவசாயிகள் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை கடும் மழையினால் நெடுங்கேணி வைத்தியசாலை வளாகத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.