;
Athirady Tamil News

யாழில் 21 வயது பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது!

0

யாழ்ப்பாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வடமராட்சி – நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கரணவாய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 4 இலட்சம் ரூபா பெறுமதியான 520 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பருத்திதுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.