;
Athirady Tamil News

இலங்கையர்களை சுட்டெரிக்கும் சூரியன் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் தரவுகளின்படி, இன்று நண்பகல் 12:13 மணியளவில் தொட்டந்துவ, ரத்கம, யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, ரன்ன, கலமெட்டிய, உஸ்ஸன்கொட ஆகிய பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
இந்த காலப்பகுதியில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவில் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தயவுசெய்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பச்சுட்டெண், அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மெனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் “எச்சரிக்கை மட்டம்” வரை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அவசிய நடவடிக்கைகள்
எனவே போதுமான நீர் அருந்துங்கள், சாத்தியமான வேளைகளில் நிழலான பகுதிகளில் ஓய்வெடுங்கள், வயதானவர்களையும் நோயாளிகளையும் கவனித்துக் கொள்ளுங்கள், சிறுவர்களை ஒரு போதும் கவனிப்பின்றி வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம், அதிக களைப்பை ஏற்படுத்தும் வெளியக நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள், நிழலான பகுதிகளில் இருப்பதுடன் போதுமான நீர் அருந்துங்கள், இலேசான வெண்ணிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.