இந்தியாவின் முதல் கடல் விமானம் – வெற்றிகரமாக சோதனை
இந்தியாவின் வான்வழி போக்குவரத்து துறையில் ஒரு வரலாற்று நிகழ்வாக, ரிஷிகேஷில் அமைந்துள்ள கங்கா தடுப்பணையில் நாட்டின் முதல் வணிகரீதியான கடல் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
அதனால் இந்தியாவின் முதல் கடல் விமான சேவை நிறுவனமாக SkyHope Aviation நிறுவனம் அறியப்படுகின்றது.
Spicejet நிறுவனர் அஜய் சிங்கின் மகள் அவனி சிங், இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
அந்நிலையில், ஏப்ரல் 6 அன்று இந்தியாவின் முதல் கடல் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
வழக்கமான விமானங்களுக்கு தேவைப்படும் நீண்ட ஓடுதளங்கள் இல்லாமல், நீர்ப்பரப்பிலிருந்தே இந்த விமானம் எளிதாக தரையிறங்கி மீண்டும் வானில் எழும்பும் கையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடினமான நிலப்பரப்புகளை கொண்ட இடங்களுக்கு எளிதில் செல்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என இந்நிறுவனத்தின் சிஇஓ அவனி சிங் தெரிவித்துள்ளார்.