மட்டக்களப்பில் தீ விபத்தில் பலியான குழந்தைகள் ; தந்தைக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்
மட்டக்களப்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் ஜூன் மாதம் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தைகளின், தந்தை வழங்கிய பல முரண்பாடான வாக்குமூலங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் பிரேதப் பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.