;
Athirady Tamil News

83 பயணிகளை பிரான்ஸ் விமான நிலையத்திலேயே விட்டு விட்டு புறப்பட்ட விமானம்

0

பிரான்சிலிருந்து மொராக்கோ நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, 83 பயணிகளை விமான நிலையத்திலேயே விட்டு விட்டுப் புறப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

பயணிகளை விட்டு விட்டுப் புறப்பட்ட விமானம்
சனிக்கிழமை மாலை, Ryanair நிறுவன விமானம் ஒன்று பிரான்சின் Marseille விமான நிலையத்திலிருந்து மொராக்கோ நாட்டிலுள்ள Marrakesh விமான நிலையத்துக்குப் புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது.

ஆனால், பயணிகளின் பயண ஆவணங்களை அதிகாரிகள் சோதித்து முடிப்பதற்கு வெகு நேரம் ஆகியுள்ளது. ஆகவே, 83 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமலே அந்த விமானம் புறப்பட்டுள்ளது.

கடந்த வாரம், இத்தாலியின் மிலன் விமான நிலையத்தில், 100 பயணிகளை விட்டுவிட்டு விமானம் ஒன்று புறப்பட்டது நினைவிருக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry Exit திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லையில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்ய தாமதம் ஆனதால் அந்த விமானம் பயணிகளை ஏற்றிக்கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது.

ஆனால், Marseille விமான நிலைய அதிகாரிகள், மொராக்கோ செல்லும் விமானம் பயணிகளை விட்டு விட்டுச் சென்றதற்கு Entry Exit திட்டத்தை காரணமாக சொல்லவில்லை. எல்லையில் பயணிகளின் ஆவணங்களை பரிசோதிக்க போதுமான அளவில் பாதுகாவலர்கள் இல்லாததாலேயே தாமதம் ஆனதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், விமானம் தங்களை ஏற்றிக்கொள்ளாமல் புறப்பட்டதால் விமான நிலையத்தில் இருந்தவர்களும், தங்கள் அன்பிற்குரியவர்களை விட்டு விட்டு புறப்பட நேர்ந்ததால் விமானத்தில் ஏறியவர்களும் கடும் கோபமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.