;
Athirady Tamil News

AC வெடித்து 9 பேர் உயிரிழப்பு ; அவதானம் மக்களே!

0

டெல்லி – உத்தரப்பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள விவேக் விகார் பகுதியில் AC வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோர விபத்து குறித்து பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டிலிருந்த AC வெடித்ததே தீ விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது கடும் வெப்ப காலநிலை நிலவி வரும் நிலையில் மக்கள் அதிகமாக AC பயன் படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.