;
Athirady Tamil News

பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம் ; இரவு வீட்டிலிருந்து வெளியேறியவருக்கு நிகழ்ந்த அசம்பாவிதம் ; மேலதிக விபரம்

0

களுத்துறை தெற்கு – கலீடோ கடற்கரையில் உடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமவைச் சேர்ந்த ஆசிரியை, அவரது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவரும் தாயாரும் களுத்துறை நாகொட மருத்துவமனைக்குச் சென்று நேற்று (2) இந்தச் சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.

மேலதிக பரிசோதனை
உயிரிழந்துள்ளவர் பண்டாரகம, வீதியகொட, கணத்தொட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாராவார்.

கடந்த முதலாம் திகதி கலீடோ கடற்கரை பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பப் பிரச்சினை காரணமாக குறித்த ஆசிரியை கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

களுத்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடலத்தைக் களுத்துறை நாகொட மருத்துவமனையின் பிரேத அறைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.

அதற்கமைய, பிரேத பரிசோதனை நாகொட மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டது. இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த, அவரின் இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளன.

இந்தநிலையில், களுத்துறை தெற்கு தலைமையகக் காவல் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.