விஜய்யின் வெற்றிக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து
தமிழக தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்தை நாமல் ராஜபக்ச எம். பி தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது,
சி. ஜோசப் விஜய்க்கு இந்த மகத்தான வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்! உண்மையான பணி இப்போதுதான் தொடங்குகிறது.
வரவிருக்கும் சவால்களை வென்று, மக்களுக்கு அர்த்தமுள்ள நன்மைகளை வழங்குவதற்கான வலிமையும் உறுதியும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் கிடைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
மேலும், இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் விடயங்களில் இலங்கையுடன் ஒரு வலுவான மற்றும் நேர்மறையான உறவு உருவாகும் என்றும் நான் நம்புகிறேன்.
உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். என்று வாழ்தியுள்ளார்.