;
Athirady Tamil News

மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய  நால்வருக்கு     கௌரவம்

0

அம்பாறை மாவட்டத்தில் மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய நால்வருக்கு புதன்கிழமை  (06) நிந்தவூரில்   கௌரவம் வழங்கப்பட்டது.

நிந்தவூர் மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஏ. ஏ. ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் ஜெகராஜன், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம்.அப்துல் லத்தீப், அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மத்தியஸ்த பயிற்றுவிப்பாளர் எம். ஐ. எம். ஆஸாத், நிந்தவூர் மத்தியஸ்த சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் மத்தியஸ்தருமான திருமதி பீ.ஏ.மஜீட் ஆகியோர்களின் சேவைகளை பாராட்டியே இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

இவர்கள் நால்வரும் மத்தியஸ்தத்திற்காக ஆற்றிய சேவை மதித்து பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிட தக்கதாகும்.

இந்த நிகழ்வில் நிந்தவூர் மத்திய அரசே சபையின் உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.