;
Athirady Tamil News

இயற்கை விசித்திரம் ; அதிசய வாழைக்குலையை காண குவியும் மக்கள்!

0

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழைமரத்தின் நடுப்பகுதியிலிருந்து வாழைக்குலை வெளிப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வாழைமரத்தின் உச்சிப்பகுதியிலிருந்து உருவாகும் வாழைக்குலை, இம்முறை மரத்தின் நடுப்பகுதியில் தண்டுகளை துளைத்து வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிசய நிகழ்வை காண அப்பகுதி மக்கள் தொடர்ந்து வருகை தருவதுடன், இதனை இயற்கை விசித்திரம் அல்லது தெய்வீக நிகழ்வு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.