;
Athirady Tamil News

அரச வாடி வீட்டிற்குள் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ; ஒருவர் படுகாயம்

0

இன்று (19) காலை கெகிராவ வாடி வீட்டின் சமையலறைக்குள் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வெடிப்பின் காரணமாக அதன் கூரை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கெகிராவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.