;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

0

மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (05) மதியம் பொத்துவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொத்துவில் – பாணம வீதியின் பசரச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் சிறுவனும் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 8 வருடங்களும் 10 மாதங்களும் வயதான சிறுவன் ஆவார்.

சம்பவம் தொடர்பில் பொத்துவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.