;
Athirady Tamil News

3-வது குழந்தை பெற்றால் மாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி: எங்கு தெரியுமா.?

0

திம்பு,

பூடானில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சரியான வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் படித்த இளைஞர்கள் பலர் அந்த நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறி வருகின்றனர். இதனால் அந்த நாட்டின் அரசாங்கம் 3-வது குழந்தை பிளஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதன் மூலம் குடும்பங்களின் மூன்றாவது மற்றும் அதற்கு அடுத்ததாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் (10,000 நல்ட்ரம்) நிதியுதவி வழங்கும் அறிவித்துள்ளது. தகுதியுள்ள குழந்தைக்கு மூன்று வயது ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் நல்ட்ரம் (மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்) பெற்றோருக்கு வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகை கண்டிப்பாக மூன்றாவது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.