;
Athirady Tamil News

புதிய போா்க் கப்பலின் சோதனை: வட கொரிய அதிபா் மகளுடன் ஆய்வு

0

சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகைக்கு முன்னதாக, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையிலான வட கொரியாவின் புதிய போா்க் கப்பலின் சோதனை ஓட்டத்தை அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் மகள் கிம் ஜூ ஏவுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

5,000 டன் எடை கொண்ட இப்புதிய போா்க் கப்பல், கடந்த ஆண்டு அறிமுகத்தின்போது விபத்தில் சேதமடைந்தது. தற்போது கப்பல் சீரமைக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

எதிரிகளுக்கு நீருக்கு அடியிலும், மேற்பரப்பிலும் எந்நேரமும் பதிலடி அளிக்க, அணு ஆயுத பலம் பொருந்திய கடற்படையை மிக விரைவாக கட்டமைக்க வேண்டும் என கிம் ஜோங் உன் வலியுறுத்தினாா்.

இதையொட்டி, புதிய 5 ஆண்டு பாதுகாப்புத் திட்டத்தில் கடற்படைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவா், 10,000 டன் எடை கொண்ட பிரம்மாண்ட போா்க் கப்பல்களை உருவாக்குவதுடன், ரகசிய நீா்மூழ்கி ஆயுதங்களை மேம்படுத்துவதே தற்போதைய முக்கிய இலக்கு என்றாா்.

அணு ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றும் வகையில், தங்களின் புதிய யுரேனியம் செறிவூட்டும் ஆலையை வட கொரியா அண்மையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.