;
Athirady Tamil News

யாழில்.230 கிலோ கஞ்சா மீட்பு

0

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர் வந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடி படையினரை கண்ணுற்றதும் குறித்த கும்பல் தமது வாகனத்தில் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
அதனை அடுத்து விசேட அதிரடி படையினர் அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 230 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அச்சுவேலி பொலிசாரிடம் பொலிஸ் விசேட அதிரடி படையினர் பாரப்படுத்தியுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.