;
Athirady Tamil News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து நொறுங்கிய பாக். ராணுவ ஹெலிகாப்டர்! பயணிகள் அனைவரும் பலி!

0

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று (ஜூன் 10) பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களில் முசாபர்பாத் அருகே தொழில்நுட்பக் கோளாறால் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக, பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த யாரும் உயிர்ப் பிழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடைபெற்ற பகுதிக்கு உடனடியாக விரைந்த மீட்புப் படையினர் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்துடன், இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவராத நிலையில், தனிக்குழுக்கள் அமைத்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.