;
Athirady Tamil News

சாகசம் செய்யும்போது தவறி, கந்தகம் நிறைந்த எரிமலை பள்ளத்தில் விழுந்த வாலிபர்; அதிர்ச்சி வீடியோ வெளியீடு

0

கெய்ரோ

ஏமன் நாட்டை சேர்ந்த 30 வயது வாலிபர் அல்-குவாகா இபின் அந்தர். உயிரை பணயம் வைத்து பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருபவர். இதனால், ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படுகிறார்.

இத்ந நிலையில், அந்நாட்டின் தெற்கே தாலே மாகாணத்தில் உள்ள தம்த் நகரருகே உள்ள ஹர்தா எரிமலை பகுதிக்கு சென்று அதன் செங்குத்து வடிவிலான சுவரில் சரசரவென ஏற தொடங்கினார். அந்த எரிமலை சுவரின் கீழே எரிமலை பள்ளம் உள்ளது.

எரிமலை வெடித்து, அணைந்த பின்னர் அதன் சாம்பல், துகள்கள் உள்ளிட்டவை இந்த பள்ளத்தில் வந்து சேரும். பின்னர் குளிர்ந்ததும் திரவ நிலைக்கு சென்று விடும். இந்த பள்ளத்தில் கந்தகம் இருந்துள்ளது. இதனால், கந்தக ஏரியாக இருந்த பகுதியில் சாகசகம் செய்ய சென்றார்.

இந்த நிலையில், 390 அடி உயரத்தில் இருந்தபோது, அந்தர் திடீரென தவறி அந்த கந்தக ஏரிக்குள் விழுந்து விட்டார். இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

அதில், ஒரு கையால் எரிமலை சுவரை பிடித்தபடியும், இரண்டு கால்களையும் தூக்கியபடியும், வளைந்தும் என பல சாகசங்களை அவர் செய்கிறார். சுவரில் விரைவாக இறங்குகிறார். சாகசத்தில் அவர் ஈடுபடும்போது பாதுகாப்பு சாதனம் எதுவும் அவரிடம் இல்லை.

அந்த கடினம் வாய்ந்த பாறை சுவரில் அரேபிய மொழியில் பெயர்களை வெள்ளை நிறத்தில் எழுதியும் வைத்துள்ளார். இந்த நிலையில், தவறி ஏரியில் விழுந்த அவருடைய உடலை நீச்சல் வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் நீண்டநேரம் தேடினர். இதில், ஏரியின் 100 அடி ஆழத்திற்குள் கிடந்த அந்தரின் உடலை மீட்டனர். சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும்படி அரசு கேட்டு கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.