;
Athirady Tamil News

நாட்டில் 40 இலட்சம் பேர் TIN இலக்கம் பெறவில்லை – அம்பலமான தகவல்

0

நாட்டில் இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் TIN இலக்கத்தை பெற்றுள்ளதாகவும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மொத்தம் சுமார் 17 மில்லியன் பேர் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரகசியத் தகவலாக கருதப்படமாட்டாது
2026 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் படி வங்கி கணக்கு திறப்பு, வாகன பதிவு, வணிக பதிவு, பங்கு பரிமாற்றம் மற்றும் கடன் அட்டை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2026 ஜூன் 3 ஆம் திகதி முதல் இந்தச் சட்டம் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில மோட்டார் வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் இலாபம், இனிமேல் வரி விதிக்கப்படக்கூடிய வருமானமாகக் கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய TIN இலக்கம் இனி இரகசியத் தகவலாக கருதப்படமாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.