;
Athirady Tamil News

ஓமன் கடற்கரை அருகே கப்பலில் இன்ஜின் கோளாறு – 14 இந்திய மாலுமிகள் மீட்பு

0

மஸ்கட்,

ஓமன் நாட்டின் கடற்கரை அருகே சென்று கொண்டிருந்த இந்திய கப்பல் ஒன்றில் எதிர்பாராத விதமாக திடீரென இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கப்பலில் இருந்த மாலுமிகள் ஓமன் கடற்படைக்கு தகவல் அனுப்பினர். அந்த கப்பலில் 14 மாலுமிகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஓமன் கடற்படை காவலர்கள் உடனடியாக மீட்பு படகுகளில் சென்று கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், “ஓமன் கடற்கரை அருகே விராட்-1 என்ற கப்பலில் இன்ஜின் கோளாறு ஏற்பட்ட நிலையில், ஓமன் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.