;
Athirady Tamil News

எங்களை ஏன் போருக்குள் இழுக்கிறீர்கள்? அமெரிக்காவிடம் இந்திய மாலுமிகள் கதறல்

0

பஹ்ரைன்,

இந்திய மாலுமிகள் பயணிக்கும் வணிகக் கப்பல்களை ஓமன் கடற்பரப்பில் வைத்து அமெரிக்க ராணுவம் தாக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 6 நாட்களில் மூன்றாவது முறையாக ஓமன் வளைகுடாவில் எம்டி ஜல்வீர் என்ற கப்பல் மீது இரண்டு ஏவுகணைகளை ஏவி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

முற்றுகை
ஓமன் வளைகுடா பகுதியில் தங்கள் முற்றுகையை மீறி வரும் எந்த கப்பலாக இருந்தாலும் தாக்குவோம் என எச்சரித்திருந்த அமெரிக்கா அதன்படி இத்தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில், ஈரானில் உள்ள வர்த்தக கப்பல்களில் பணிபுரியும் அப்பாவி இந்திய மாலுமிகள் தங்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கேட்டு இந்த வீடியோ வெளியிட்டுள்ளனர்.

“நாங்கள் ராணுவ படையும் அல்ல, ஆயுதம் ஏந்தியவர்களும் அல்ல. எங்களை ஏன் உங்கள் போருக்குள் இழுக்கிறீர்கள்?” மேலும் கடல் பகுதியில் இந்திய கப்பல்களை மட்டும் அமெரிக்கா குறிவைப்பது ஏன்? என்றும் மாலுமிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.