;
Athirady Tamil News

யாழில் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல்

0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில்குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் அயல்வீடுகளை சேர்ந்த இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஒருவர் மற்றையவர் மீது கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.