;
Athirady Tamil News

நூலிழையில் காட்டு யானையிடமிருந்து தப்பிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

0

சிகிரியா பாறைக்கோட்டையின் நுழைவாயிலுக்கு அருகில் காட்டு யானை ஒன்றை எதிர்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர், எவ்வித காயங்களுமின்றி நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நான்கு பேரைக் கொண்ட சுற்றுலா பயணிகள் இன்று (23) அதிகாலை 4 மணியளவில் சிகிரியா கோட்டைக்குள் நுழைவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே காட்டு யானையை எதிர்கொண்டுள்ளனர்.

யானை வருவதனை அங்கிருந்த பாதுகாப்புச் சாவடியில் கடமையிலிருந்த பாதுகாப்பு அதிகாரி விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அக்குழுவில் இருந்த பெண்கள் ஓடத் தொடங்கினர்.

அப்போது அந்த யானை அவர்களைத் துரத்தியுள்ளது. எனினும், அவர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாகத் தப்பியுள்ளனர். அந்த யானை பின்னர் அங்கிருந்து நடந்து செல்வது சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.